முதல்வர் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை

 

முதல்வர் மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜ் பவனுக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜ் பவனுக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு நடந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கையும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை ராஜ் பவனுக்கு அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ள நிலையில், அத்துறையின் இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, முதல்வர் மீதான முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், முதல்வர் பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.