முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை

 

முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களுடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. மூன்றாவது நீதிபதியாக நியமணம் செய்யப்பட்ட சத்யநாராயணன் தீர்ப்பை வழங்கவுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனைக்கு பின்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.சி.சம்பத், துரைக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.