முதல்வர் பதவி வேண்டாம்; கட்சிக்கு தலைமை மட்டும் தான்? நிர்வாகிகளிடம் ரஜினி சொன்னது இதுதானாம்!?

 

முதல்வர் பதவி வேண்டாம்; கட்சிக்கு தலைமை மட்டும் தான்? நிர்வாகிகளிடம் ரஜினி சொன்னது இதுதானாம்!?

ரஜினி தலைமையில் நேற்று  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது . 

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.   ரஜினி விரைவில் கட்சித்தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ரஜினி தலைமையில் நேற்று  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது . 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி,  ‘கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களைச் சந்தித்து பேசினேன்.கட்சி தொடங்கும் விவகாரத்தில் நிர்வாகிகளுக்குப் பல விஷயங்களில்  திருப்தி. ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி இல்லை. ஏமாற்றம் தான். அதை பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்’ என்றார்.


இந்நிலையில் ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்றும் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால்  முதல்வராக மாட்டேன்,  கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கட்சியே கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது