முதல்வர் பதவி… நடுக்கத்தில் நாடு விட்டு நாடு செல்லும் எடப்பாடி… உள்ளூர சிரிக்கும் ஓ.பி.எஸ் டீம்..!

 

முதல்வர் பதவி… நடுக்கத்தில் நாடு விட்டு நாடு செல்லும் எடப்பாடி… உள்ளூர சிரிக்கும் ஓ.பி.எஸ் டீம்..!

நான் இல்லாவிட்டாலும் என் கை அரசியலில் ஓங்கியே இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதிகாரிகளும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் தைரியமாக சென்று வாருங்கள் என்று சொன்னதாக தற்போதுதகவல் வெளியாகி இருக்கிறது

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போவதற்கு முன்பாக தனக்கு வேண்டிய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அழைத்து பேசி இருக்கிறார். நான் வரும் வரையில் இங்கிருந்து தினமும் அரசியல் மற்றும் நிர்வாக தகவல்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும். நான் இல்லாதபோது யாராவது மாற்று பிளானை செயல்படுத்த நினைத்தால் நீங்கள்தான் தடுக்க வேண்டும்.

அப்படி ஏதாவது நடப்பதாக இருந்தாலும் அதையும் நீங்களே என் சார்பாக சமாளித்து வீழ்த்திய தகவலை தர வேண்டும். இதற்காக என்னை வெளிநாட்டில் இருந்து பாதியில் வரச் சொன்னால் என் கெத்தான அரசியல் வீழ்ந்துவிடும். எனவே நான் இல்லாவிட்டாலும் என் கை அரசியலில் ஓங்கியே இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதிகாரிகளும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் தைரியமாக சென்று வாருங்கள் என்று சொன்னதாக தற்போதுதகவல் வெளியாகி இருக்கிறது.

என்னதான் கெத்தாக வெளிநாட்டிற்கு சென்றாலும் உள்ளூரில் அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை சொல்லி சிரிக்கிறது ஓ.பி.எஸ் வட்டாரம். சேலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் பஞ்சமே இல்லை. வாழப்பாடி அருகே ஒரு ஊரில் பேசியபோது, ‘நான் ஒரு விவசாயி. தற்போது 180 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்றேன். அடுத்து 300 ஏக்கரில் பாக்கு விவசாயம் செய்யப்போகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் நாட்டை பற்றி கேள்விப்பட்டபோது தான், வெளிநாடு செல்லும் எண்ணமே வந்தது. ஆனால், தற்போது அங்கு தேர்தல் நடப்பதால் செல்ல முடியவில்லை’’ என்று வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், அவருக்கு சோகமான விஷயம் மேடைக்கு வெளியே காத்திருந்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் கும்பலாக வெளியே காத்திருந்தார்கள். அவர்களை பார்த்ததும் எடப்பாடியாரின் உற்சாகம் காணாமல் போய்விட்டது. அவர்கள் தனக்கு எதிராக கோஷம் எழுப்பி விடுவார்களோ என்ற எண்ணத்தில் பதற்றமாகி விட்டார். காவல் துறையினரும், கட்சியினரும் வந்து அவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான் எடப்பாடி நிம்மதி மோடுக்கு வந்துள்ளார்.