முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!

 

முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்: நெகிழ்ச்சி சம்பவம்!

மக்களை காக்க நிவாரண நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், அதிலிருந்து மக்களை காக்க நிவாரண நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த சிறுவர்கள், தங்களது உண்டியல் சேமிப்பை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கோவை ஆவாராம்பாளையம் சாலையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ரேனோ ஜோஸ்வா(5), மகள் ஷெர்லி(3). இவர்கள் இரண்டு பேரும் முதல்வர் நிவாரண நிதிக்கு, பள்ளி கட்டணம் செலுத்த சேர்த்து வைத்திருந்த ரூ.7,060யை வழங்க பெற்றோர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு பெற்றோர் சம்மதித்ததின் பேரில், ரேனோ ஜோஸ்வா மற்றும் ஷெர்லி கோவை மாவட்ட ஆட்சியரின் அலுவகத்துக்கு வந்து, சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளனர். முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்த, அந்த சிறுவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.