முதல்வர், காவல்துறை மீது அவதூறு பேச்சு: கருணாஸூக்கு கிடைத்தது ஜாமீன்

 

முதல்வர், காவல்துறை மீது அவதூறு பேச்சு: கருணாஸூக்கு கிடைத்தது ஜாமீன்

முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாகப் பேசிய வழக்கில், எம்.எல்,ஏ கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை: முதல்வர் மற்றும் காவல் துறையை அவதூறாகப் பேசிய வழக்கில், எம்.எல்,ஏ கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மற்றும் காவல்துறையை மிகவும் தரக்குறைவாக பேசினார். முதல்வர் பழனிசாமியை சாதிய ரீதியாகவும், காவல்துறை அதிகாரி அரவிந்தனை போலீஸ் சீருடையை கழற்றிவைத்துவிட்டு வரவும் எனவும் அவதூறாக பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருணாஸ்  கடந்த 23-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.  இதனிடையே, காவல்துறையினர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரினர். ஆனால், நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்தது. மேலும்  திருவல்லிக்கேணி காவல்துறை கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவுசெய்து அவரை மீண்டும் கைது செய்தது. 

இதற்கிடையே கருணாஸ் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கருணாஸூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.