“முதல்வர் ஒரே பாலில் 9 ரன்கள் எடுப்பார்”…கூட்டத்தொடரில் எடப்பாடியைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் !

 

“முதல்வர் ஒரே பாலில் 9 ரன்கள்  எடுப்பார்”…கூட்டத்தொடரில் எடப்பாடியைப் புகழ்ந்து பேசிய அமைச்சர் !

முதலாவதாக  நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர்,  திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது.

தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்புதல் கேட்டதன் பேரில், முதலாவதாக  நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூர்,  திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தது. அதன் பின்னர், மீண்டும் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நகை ஆகிய மாவட்டங்களில் 3 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு முதல்வர் வழிவகுத்தார். 

ttn

இந்நிலையில் இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், ” ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம். சிக்ஸர் அடிக்கலாம். ஏன் பவுண்டரி சிக்ஸர் கூட அடிக்கலாம். ஆனால், நம் முதல்வர் ஒரே பாலில் 9 ரன் அடிப்பார். ஏற்கனவே முதல்வர் 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். தற்போது, மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்டுள்ளார்” என்று கூறினார். நம் முதல்வர் ஒரே பாலில் 9 ரன் அடிப்பார் என்று அமைச்சர் கூறிய உடன் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.