முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்ச் 7 ஆம் தேதி ‘பாராட்டு விழா’ !

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்ச் 7 ஆம் தேதி ‘பாராட்டு விழா’ !

கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ttn

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இது விவசாயிகளிடையே மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

ttn

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக நன்றி செலுத்தும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்ச் 7 ஆம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்த விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பாராட்டு விழா நடத்தப் பட்டதை போல எடப்பாடிக்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.