முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் !

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் !

இன்று காலை 10:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு தொடங்கிய உடன் தமிழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 10:30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிடோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கியமாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட  2020-2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

ttn

அதனைத்தொடர்ந்து. சீனாவை உருக்குலைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றியும், அதிலிருந்து தமிழகத்தைக் காக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும் நகர்ப்புற தேர்தல் பற்றியும், தமிழகத்தின் சில முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றியும் விவாதிக்கப் பட உள்ளது.