முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம்: அப்போது முதல்வர் பொறுப்பு யாருக்கு?

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளிநாடு சுற்றுப்பயணம்: அப்போது முதல்வர் பொறுப்பு யாருக்கு?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வெளிநாடு சுற்றுப்பயணம்: அப்போது முதல்வர் பொறுப்பு யாருக்கு?

சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்யவுள்ள நிலையில், தனது பொறுப்புகளை யாரிடமும் அளிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  இதற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. 

sec

பொதுவாக இதுபோன்ற அரசுமுறை பயணங்களின் போது மாநில  முதல்வர்கள் தனது பொறுப்புகளை மூத்த அமைச்சரிடத்தில் ஒப்படைத்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தனது பொறுப்புகளைத் துணை முதல்வர் அல்லது மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைக்கவில்லையாம். மாறாக  வெளிநாடு பயணத்தின் போதும், தானே தனது பணிகளைச் செய்வார் என்றும் தேவைப்படும் நேரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.