முதல்வர் எங்களை விடுவிக்க வேண்டும் : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேண்டுகோள்..!

 

முதல்வர் எங்களை விடுவிக்க வேண்டும் : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேண்டுகோள்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு ஒரு முறை சிறை அதிகாரியின் ஒப்புதலுடன் இவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 
 

Nalini murugan

நளினி 8 நாட்களாகவும், முருகன் 15 நாட்களாகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் இருவர்களிடமும் அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.

Nalini

அதன் பின், செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, தனிமை சிறையிலிருந்து வரும் இருவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் இருவரும் 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நளினி சொல்லியதாகத் தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதத்தால் சோர்வு நிலையில் இருக்கும் முருகன் எப்போது உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறாரோ அப்போது தான் நானும் கைவிடுவேன் என்றும் நளினி கூறியதாகத் தெரிவித்தார்.