முதல்வருக்கு பட்டம் கொடுக்க ஆலோசனை : டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் தகவல் !

 

முதல்வருக்கு பட்டம் கொடுக்க ஆலோசனை : டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் தகவல் !

விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதாவைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

tt n

இந்நிலையில் இன்று திருச்சிக்கு வந்திருந்த முதல்வரைக் காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் ரெங்கநாதன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ரெங்கநாதன், ” காவிரி விவகாரத்தை கெஜட்டில் வெளியிட செய்ததால் ஜெயலலிதாவிற்குப் பாராட்டு விழா நடத்தி ” பொன்னியின் செல்வி” என்று பட்டம் கொடுத்தோம். இப்போது, டெல்டா மாவட்டங்கள் என்ன ஆகும் என்ற கவலையிலிருந்த எங்களுக்கு டெல்டாவை மீட்டுக் கொடுத்த முதல்வருக்கு மார்ச் 7 ஆம் தேதி நடக்க உள்ள பாராட்டு விழாவில் பட்டம் கொடுக்கலாம் என்று ஆலோசித்து வருகிறோம். அந்த பட்டத்தைப் பாராட்டு விழாவின் போது அறிவிப்போம். 

ttn

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.  தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அருகாமையில் வாய்க்கால் ஓடுகிறது. அதனால் இந்த பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டியது இன்றியமையாதது. விடுபட்ட இடங்களுக்கு உரியக் காரணம் இருக்கும். சட்ட முன்வடிவு இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அப்போது தான் உங்களுக்குப் புரியும்” என்று கூறினார்.