முதல்வரின் மாவட்டத்தில் பரிதவிக்கும் மக்கள்! கண்டுக் கொள்ளாத திராவிட கட்சிகள்!

 

முதல்வரின் மாவட்டத்தில் பரிதவிக்கும் மக்கள்! கண்டுக் கொள்ளாத திராவிட கட்சிகள்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் திருவாரூருக்கு தனி கவனம் இருக்கிறது. பல முறை விசேஷ விஜபி தொகுதியாகவும், திமுகவின் கோட்டையாகவும் பல காலங்களாக விளங்கி வரும் தொகுதி திருவாரூர்.  இத்தனைக்கும் தேர்தல் சமயத்தில் அந்த தொகுதியில் கலைஞர் தீவிர பிரச்சாரம் எல்லாம் செய்யமாட்டார். கலைஞரின் சார்பில் செல்வி மட்டும் தான் அக்கம்பக்கத்து வீடுகளில் சென்று வோட்டு சேகரிப்பார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் திருவாரூருக்கு தனி கவனம் இருக்கிறது. பல முறை விசேஷ விஜபி தொகுதியாகவும், திமுகவின் கோட்டையாகவும் பல காலங்களாக விளங்கி வரும் தொகுதி திருவாரூர்.  இத்தனைக்கும் தேர்தல் சமயத்தில் அந்த தொகுதியில் கலைஞர் தீவிர பிரச்சாரம் எல்லாம் செய்யமாட்டார். கலைஞரின் சார்பில் செல்வி மட்டும் தான் அக்கம்பக்கத்து வீடுகளில் சென்று வோட்டு சேகரிப்பார். அதிக முறைகளாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர், தோல்வியே அறியாதவர் என்றெல்லாம் போற்றப்படும் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தான் இந்த கொடுமை நடந்து வருகிறது. 

selvi

200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பாக்கம் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு கடந்த 40 வருடங்களாக சாலை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். நகருக்குள் வர வேண்டுமானால், கிட்டத்தட்ட 20 முதல் 30 கி.மீ. வரை சுற்றிச் செல்ல வேண்டும். மழைக்காலங்களில் வெட்டாற்றில் தண்ணீர் அதிகமிருந்தால், தோணி அமைத்து தான் அவசர பயணம். ஆம்புலன்ஸோ, ஆஸ்பத்திரியோ எல்லாமே இந்த 30 கி.மீ சுற்றித் தான் வரவேண்டும். அரசின் காதுகளில் இந்த மக்களின் குரல் இனியாவது விழுமா?