முதல்வரின் தண்ணீர் பாக்கிக்காக பிச்சை எடுத்த காங்கிரஸ் இளைஞர்கள் | ரயில் நிலையம் எதிரே பரபரப்பு

 

முதல்வரின் தண்ணீர் பாக்கிக்காக பிச்சை எடுத்த காங்கிரஸ் இளைஞர்கள் | ரயில் நிலையம் எதிரே பரபரப்பு

தண்ணீர் பிரச்சினை இந்தியா முழுவதுமே எதிரொலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், மும்பை முதல்மந்திரிக்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சினை இந்தியா முழுவதுமே எதிரொலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், மும்பை முதல்மந்திரிக்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

youth congress

முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உட்பட தற்போதைய மந்திரிகள் அனைவரும் சேர்ந்து மும்பை மாநகராட்சிக்கு சுமார் ரூ.8 கோடிகள் வரையில் தண்ணீர் கட்டணம் செலுத்தாமல் இதுவரையில் பாக்கி வைத்து உள்ளனர். இந்த தகவலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரிந்து கொண்ட எதிர்கட்சியினர், இந்த செயலுக்கு பலத்த கண்டனம் தெரிவித்து உள்ளன. 

வறுமையில் வாடுவதால் முதல்வர் உட்பட மாநில மந்திரிகள் அனைவரும் தண்ணீர் கட்டண பாக்கியை செலுத்தாமல் மும்பை மாநகராட்சியை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களிடம் தண்ணீர் பாக்கியைச் செலுத்த பணம் இல்லாத காரணத்தினால், இவர்களுக்காக பிச்சை எடுத்து, அந்த பணத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்து செலுத்த சொல்லப் போகிறோம்’ என்று பிச்சை எடுக்கும் போராட்டத்தை  தேசியவாத காங்கிரஸ் இளைஞர் அணியினர் அறிவித்து, நேற்று மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம் எதிரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

devanthiranatha

டாப் தமிழ் நியூஸ் நிருபரிடம் இதுகுறித்து பேசிய இளைஞரணி செயல் தலைவர் சவான், ‘பொதுமக்கள் யாராவது இது போல ஒரு மாதமோ, 2 மாதமோ இதுபோல் தண்ணீர் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தால், உடனே மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு தண்ணீர் இணைப்பைத் துண்டித்து விடுகிறது.ஆனால், முதல் மந்திரி பங்களா பல மாதங்களாக தண்ணீர் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறது. 

youth congress

சரி அவர்களிடம் தண்ணீர் கட்டணம் செலுத்த பணமில்லை போல என்று அந்த பாக்கியை செலுத்துவதற்காக தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் நான்கைந்து நாட்களுக்குள் மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசினுடைய பங்களாவிற்கு நாங்கள் அனைவரும் பேரணியாக சென்று, அவர் இல்லத்தின் தண்ணீர் இணைப்பைத் துண்டிப்போம். அப்போதாவது பொறுப்பு வந்து தண்ணீர் கட்டணத்தைச் செலுத்துகிறாரா என்று பார்க்கலாம்’ என்று தெரிவித்தார்.