“முதல்ல டிக்-டாக் கில் நடி ,அப்புறம் படி” -படிக்க வந்த மாணவர்களை நடிக்க வைத்த ஆசிரியர்கள்.. 

“முதல்ல டிக்-டாக் கில் நடி ,அப்புறம் படி” -படிக்க வந்த மாணவர்களை நடிக்க வைத்த ஆசிரியர்கள்.. 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும்  குருக்களாக கருதப்படுகிறார்கள்.ஆனால் ஆசிரியர்களே மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும்போது , ​​மாணவர்களின் வாழ்க்கை இருண்டு  போகும் .

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும்  குருக்களாக கருதப்படுகிறார்கள்.ஆனால் ஆசிரியர்களே மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும்போது , ​​மாணவர்களின் வாழ்க்கை இருண்டு  போகும் .

 மகாராஷ்டிராவில் பர்பாணியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் மாணவர்களை அந்த பள்ளியில்  இருக்கும் இரண்டு ஆசிரியர்கள் டிக்-டாக் வீடியோவில் நடிக்க வைத்து படமெடுத்து அவரது அக்கௌண்டில் வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் மாணவர்களை டிக்-டாக்க்கில் தொடர்ந்து அனைவரும் நடிக்கா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார்.இதனால் மிரண்ட மாணவர்கள் இதுபற்றி தங்களின் பெற்றோரிடம் கூறினார்கள் .

tiktok video.jpg

உடனே பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோரிடம்   புகார் அளித்தார்கள் .அப்படி புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பள்ளியை இழுத்து பூட்டினார்கள் .
அவர்கள் அளித்த புகாரில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான்   கிராம மக்கள் இந்த விஷயத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதாக பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் ஜான்கிராம் பவார் தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக போராடிய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்களை கல்வித்துறை பணிநீக்கம் செய்து இரண்டு புதிய ஆசிரியர்களை  நியமித்தது. திங்கள்கிழமை முதல் வகுப்புகள் சீராக நடந்து வருகின்றன.