முதல்ல கொரோனா…. அப்புறம் கோவிட்…. இப்பம் லாக்டவுன்…. குழந்தைகளுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டும் பெற்றோர்கள்

 

முதல்ல கொரோனா…. அப்புறம் கோவிட்…. இப்பம் லாக்டவுன்…. குழந்தைகளுக்கு வித்தியாசமாக பெயர் சூட்டும் பெற்றோர்கள்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது ஆண் குழந்தைக்கு லாக்டவுன் என பெயர் சூட்டியுள்ளனர். அண்மையில் சில பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

உலகை ஆட்டி படைத்து வருகிறது தொற்றுநோயான கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19. தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த பல நாடுகள் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. சமீபகாலமாக கொரோனா வைரஸ், கோவிட் மற்றும் லாக்டவுன் குறித்து மக்கள் அதிகம் பேசி வருகின்றனர். இதனால் இந்த வார்த்தைகளை உச்சரித்தாலே கொரோனா நிகழ்வுகள் மனதில் எழுந்துவிடும்.

கொரோனா, கோவிட் என பெயரிடப்பட்ட இரட்டையர்கள்

தற்போது இது போன்ற பிரபலமான பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவது பேஷனாக மாறி வருகிறது. அண்மையில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்டனர். தற்போது அந்த வரிசையில் லாக்டவுன் என தங்களது ஆண் குழந்தைக்கு சூட்டியுள்ளனர் மத்திய பிரதேச தம்பதியினர். மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தின் தலைமையகத்திலிருந்து 90 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பச்சேரி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த மஞ்சு மாலி என்ற பெண்ணுக்கு கடந்த திங்கட்கிழமையன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

பிறந்த குழந்தைகள் (கோப்பு படம்)

அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் லாக்டவுன் என்ற பெயரில் தரும்படி ரகுநாத்-மஞ்சு மாலி தம்பதியினர் மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். குழந்தையின் அம்மா மஞ்சு மாலி கூறுகையில், ஆமாம். அவன் லாக்டவுன் காலத்தில் பிறந்ததால் அவன் லாக்டவுன்தான் என தெரிவித்தார். மஞ்சு மாலியின் கணவர் ரகுநாத் கூறுகையில். இந்த நெருக்கடியான காலத்தை எனது மகனும், எங்களது குடும்பமும் வாழ்க்கை முழுவதும் மறக்காது. உலகம் முழுவதும் தொற்றுநோயை நீக்குவதற்கு லாக்டவுனை பயன்படுத்துகிறது. நாம் லாக்டவுனை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்தார்.