முதல்ல கொடுத்த கடனுக்கே வேலை நடக்கலை… இரண்டாவது தவணைக்கு வந்துட்டீங்களா? – நிதியை நிறுத்திய உலக வங்கி!

முதல்ல கொடுத்த கடனுக்கே வேலை நடக்கலை… இரண்டாவது தவணைக்கு வந்துட்டீங்களா? – நிதியை நிறுத்திய உலக வங்கி!

பாசனத் திட்டத்துக்கு உலக வங்கி வழங்கிய நிதியை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றும், இதனால் இரண்டாவது கட்ட நிதி உதவியை உலக வங்கி நிறுத்தியுள்ளதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பாசன உள் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்காக உலக வங்கி ரூ.2800 கோடி கடன் வழங்கியது. இந்த நிதியைக் கொண்டு ஐந்தாயிரம் ஏரிகள், 500 அணைக்கட்டுக்களை புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.

world bank

முதல் கட்டமாக ரூ.2131 கோடியில் 4778 ஏரிகள், 477 அணைகள் புனரமைக்கவும், செயற்கை முறையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, செறிவூட்டவும் திட்டமிடப்பட்டது. இதற்கு 2018ம் ஆண்டு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த பணிகள் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. கடன் தொகை முழுமையாக செலவிடப்பட்டதா என்று உலக வங்கி ஆய்வு நடத்தியது. அதில் பல திட்டங்கள் முடிக்கப்படாமல் இருப்பது கண்டு உலக வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பணிகள் நிறைவு பெறாமல் மட்டுமே இரண்டாவது கட்ட நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

world bank

ஆனால், தமிழக அரசு அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் இரண்டாவது கட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்களை அடையாளம் கண்டு, அதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல் கட்ட பணிகளையே நிறைவேற்ற முடியவில்லை. உலக வங்கியும் இரண்டாவது கட்ட நிதியை அளிக்க மறுத்துவிட்டதாகச் செய்தி வெளியாகி உள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு புதிய டெண்டர் விடுவதில் காட்டும் ஆர்வம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தி உலக வங்கியிடம் இருந்து வாங்கிய கடன் மக்கள் திட்டங்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.