முதலீட்டாளர்களை முட்டி தள்ளிய காளை! சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது..

 

முதலீட்டாளர்களை முட்டி தள்ளிய காளை! சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது..

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. சென்செக்ஸ் 192 புள்ளிகள் குறைந்தது.

இன்று மே மாத நிதிப்பற்றாக்குறை நிலவரம், தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் இன்று வெளியாகிறது. இது குறித்த எதிர்பார்ப்புகளால் வாரத்தின் இறுதி வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் படுத்தது. மேலும் மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டினர். 

ஷேர் மார்க்கெட்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., டெக் மகிந்திரா, மாருதி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,151 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,375 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது. அதேசமயம் 159 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இன்றி முடிவடைந்தது. மேலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,51,94,621.68 கோடியாக குறைந்தது. நேற்று நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,52,34,987.69 கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் சரிவு

இன்றைய வர்த்தகத்தின் முடிவின்போது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 191.77 புள்ளிகள் குறைந்து 39,394.64 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 52.70 புள்ளிகள் வீழ்ந்து 11,788.85 புள்ளிகளில் முடிவுற்றது.