முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பங்கு வர்த்தகம்…. ரூ.11 லட்சம் கோடி அவுட்….. சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் வீழ்ச்சி…

 

முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பங்கு வர்த்தகம்…. ரூ.11 லட்சம் கோடி அவுட்….. சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் வீழ்ச்சி…

பங்குச் சந்தைகளுக்கு இன்று மறக்க முடியாத மோசமான தினமாக அமைந்து விட்டது. சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸை தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதுதான் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். அடுத்து கொரோனா வைரஸை பரவுவதை தடுக்கும் நோக்கில் ஐரோப்பிய நாட்டவர்கள் அமெரிக்கா வருவதற்கு அதிபர் டிரம்ப் தற்காலிகமாக தடை விதித்தார். இது சர்வதேச பங்குச் சந்தைகளில் சரிவுக்கு வித்திட்டது.

கொரோனா வைரசுக்கு சிகிச்சை

நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரா இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்ததகத்தின் இடையே கடும் சரிவை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நிலவரம் மிகவும் கலவரமாக இருந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 225 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,242 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 106 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.125.90 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.11.22 லட்சம் கோடியை இழந்தனர்.

முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும், ஸ்டேட் வங்கி, ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.சி., பஜாஜ் ஆட்டோ, இண்டஸ்இந்த் வங்கி உள்பட 30 நிறுவன பங்குகளின் விலையும் இன்று குறைந்தது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,919.26 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 32,778.14 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 868.25 புள்ளிகள் சரிந்து 9,590.15 புள்ளிகளில் முடிவுற்றது.