முதலீட்டாளர்களுக்கு ரூ.51 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது…

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.51 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது…

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2 தினங்களாக சரிவை சந்தித்து வந்த பங்கு வர்ததகம் இன்று ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்பு சிறிது சரிவு கண்டாலும் பின்னர் மளமளவென ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் நேற்றைய முடிவை காட்டிலும் சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருப்பினும் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமான பெரிய தகவல்கள் எதுவும் இல்லாததால் பின்னர் மெல்ல மெல்ல ஏற்றம் குறைய தொடங்கியது. இறுதியில் சிறிய ஏற்றத்துடன் பங்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

எச்.டி.எப்.சி. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி., பார்தி ஏர்டெல், ஹீரோமோட்டோ கார்ப் மற்றும் என்.டி.பி.சி. உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஐ.டி.சி., டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,092 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,234 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.123.03 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.51 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது 

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 232.34 புள்ளிகள் உயர்ந்து 31,685.75 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 65.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,270.90 புள்ளிகளில் முடிவுற்றது.