முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது

 

முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த பங்கு வர்த்தகம்!  சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது

கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர் சரிவு கண்ட பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பிரச்னை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அடி மேல் அடி வாங்கியதால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இதனை முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பாக கருதி முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். இது  போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. 

அமெரிக்கா -சீனா வர்த்தக போர்
சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் இண்டஸ்இந்த் வங்கி, பார்திஏர்டெல், ஸ்டேட் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐ.டி.சி., இன்போசிஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,281 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,237 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.143.92 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.24 லட்சம் கோடியாக இருந்தது.

ஏர்டெல்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 645.97 புள்ளிகள் உயர்ந்து 38,177.95 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி  186.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,313.30 புள்ளிகளில் நிலை கொண்டது.