முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த 6 நிறுவன பங்குகள்! ரூ.53 ஆயிரம் கோடி அவுட்!

 

முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்த 6 நிறுவன பங்குகள்! ரூ.53 ஆயிரம் கோடி அவுட்!

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை கடுமையாக குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களின் பணம் ரூ.53 ஆயிரம் கோடி கரைந்தது.

நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதல் பத்து இடங்களில் முறையே டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.டி.எப்.சி.நிறுவனம், ஐ.டி.சி., இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவை உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த டாப் 10 நிறுவனங்களில் 6 நிறுவனங்களின் பங்கு விலை கடந்த வாரம் குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.டி.எப்.சி. நிறுவனம், டி.சி.எஸ். மற்றும் ஐ.டி.சி. ஆகிய 6 நிறுவன பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.53,458 கோடி சரிந்தது. அந்த பங்குகளில் முதலீடு செய்து இருந்த முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.23,929 கோடி இழப்பு ஏற்பட்டது. 

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

அதேசமயம் 4 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்தது. அதாவது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்பு உயர்ந்தது. இந்த 4 நிறுவன பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் ஏற்றம் கண்டது. குறிப்பாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.8,363 கோடி உயர்ந்தது. இந்த பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு சென்ற வாரம் லாபம் கொட்டியது.