முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி… புதிய மாற்றங்களுடன் களமிறக்கம்!

 

முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி… புதிய மாற்றங்களுடன் களமிறக்கம்!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விண்டீஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

India Vs West Indies

இந்நிலையில் இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பொல்லார்டு, முதல் போட்டியை போலவே பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இன்றைய போட்டியில் நிச்சயம் வென்று தொடரை சமன் செய்யவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. அதேநேரம் டி20 தொடரை இழந்ததால் இன்றைய போட்டியில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு விண்டீஸ் அணி களம் இறங்குகிறது.

விண்டீஸ் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்குகிறது. துவக்க வீரர் லீவிஸ் காயத்திலிருந்து குணமடைந்து, மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அதேபோல் பந்துவீச்சாளர் பியரி மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.

இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஷிவம் டுபே வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் உள்ளே எடுத்து வரப்பட்டு இருக்கிறார்.

 

இன்றைய போட்டியில் களமிறங்கும் அணி வீரர்களின் பட்டியல்:

இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ்

விண்டீஸ் அணி வீரர்கள்: ஷாய் ஹோப் (கீப்பர்), எவின் லூயிஸ், சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ரோஸ்டன் சேஸ், கீரோன் பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், கேரி பியர்