“முதலிரவிலேயே மோசம் பண்ணிட்டியேடி” -காத்திருந்த மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்.

“முதலிரவிலேயே மோசம் பண்ணிட்டியேடி” -காத்திருந்த மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்.

தனது கல்யாணத்தன்றே மாப்பிள்ளை வீட்டாரின் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடிய மணப்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள் .

“முதலிரவிலேயே மோசம் பண்ணிட்டியேடி” -காத்திருந்த மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்.

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் வசிக்கும் ஒரு 30 வயதான வாலிபருக்கு பல ஆண்டுகளாக கல்யாணத்திற்கு பெண் தேடியும் சரியான வரன் கிடைக்காமல் திண்டாடினார் .அதனால் அவர் தனக்கு ஒரு பெண் வேண்டுமென்று தன்னுடைய உறவினர்களைக் கேட்டு கொண்டார்
அதனால் அவரின் மைத்துனர், ஃபாரூக்காபாத்தைச் சேர்ந்த ஒரு ஏழை தொழிலாளியின் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.அதற்கு அந்த வாலிபரும் சம்மதித்தார் .அதன் பிறகு அந்த மணமகள் குடும்பத்திற்கு அந்த மாப்பிள்ளை கல்யாண செலவிற்காக 30000 ரூபாய் பணம் கொடுத்தார் .
அதன் பிறகு அவர்களின் திருமணம் ஃபாரூக்காபாத்தில் உள்ள ஒரு கோவிலில் கடந்த வாரம் நடந்தது .அந்த கல்யாணம் முடிந்ததும் மணப்பெண்ணை அவரின் உறவினர்கள் சிலரோடு மாப்பிள்ளையின் வீட்டிற்கு கூட்டி சென்றார்கள் .பிறகு மாப்பிள்ளையின் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் தட புடலாக நடந்து கொண்டிருந்தது .அந்த மாப்பிள்ளையும் முதலிரவில் மணப்பெண்ணுக்காக காத்து கொண்டிருந்தார் .ஆனால் அப்போது அந்த மணப்பெண் தன்னுடைய உறவினர்கள் சிலரோடு அந்த வீட்டிலிருந்து பெண்களின் நகைகளோடு தப்பியோடிவிட்டார் என்ற தகவல் மாப்பிள்ளையின் காதில் இடியாக விழுந்தது .பின்னர் மணமகன் வீட்டார் , போலீசில் அந்த மணமகள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்தார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மணமகள் மற்றும் அவரின் உறவினர்களை தேடி வருகின்றனர் .

“முதலிரவிலேயே மோசம் பண்ணிட்டியேடி” -காத்திருந்த மாப்பிள்ளைக்கு அல்வா கொடுத்த மணப்பெண்.