முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் குமாரசாமி?

 

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் குமாரசாமி?

கர்நாடகாவில் ஆட்சி நீடிக்குமா… அல்லது கவிழுமா என்பது கடந்த சில நாட்களாக பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை.

கர்நாடகாவில் ஆட்சி நீடிக்குமா… அல்லது கவிழுமா என்பது கடந்த சில நாட்களாக பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழும் நிலைக்கு சென்றது. கர்நாடக சட்டசபையின் பலம் 225. இங்கு பெரும்பான்மை பெற 113 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது காங்கிரஸ் – மஜதவில் இருந்து 16 பேர் ராஜினாமா செய்துள்ளதால், அந்த கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. காங்கிரஸ் – மஜத கூட்டணி பலம் 102 ஆக குறைந்துள்ளது.

kumarasamy

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அம்மாநில சட்டப்பேரவை கூடி இதுகுறித்த விவாதத்தில் ஈடுபட்டுள்ளது. தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி கடந்த வியாழக்கிழமை கொண்டுவந்தார். மூன்றாவது நாளான இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்திருந்தார். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் அம்மாநில சபாநாயகர் ரமேஷ் குமார் உறுதியாக இருக்கிறார். இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை நடக்கவில்லை. இதையடுத்து இரவு 7 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலாவை குமாரசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளிக்கவுள்ளார்.