முதலமைச்சருக்கும் அபராதம் – டெல்லியில் கட்கரி உறுதி!

 

முதலமைச்சருக்கும் அபராதம் – டெல்லியில் கட்கரி உறுதி!

போலீசாரிடம் சிக்கியபிறகு முதலில் அவர்கள் கேட்பது “நான் யார் தெரியுமா” என்பதுதான். கேள்வியில் இருக்கும் அதிகார தொனியிலேயே பாதி காவலர்கள் பயந்துவிடுவதுண்டு. ஆனால், ‘எனக்கு ஐ.ஜிய தெரியும், ஆனா அவருக்கு என்னை தெரியாது’ வகையைச் சேர்ந்ததாக இருக்கும்.

முதலமைச்சருக்கும் அபராதம் – டெல்லியில் கட்கரி உறுதி!

”நான் யார் தெரியுமா?” போக்குவரத்து காவலர்கள் அதிகம் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, அதிவேகத்தில் எதிரே வருபவர்களை பயமுறுத்தும் அளவுக்கு ஓட்டுவது என எல்லா தவறையும் செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்கியபிறகு முதலில் அவர்கள் கேட்பது “நான் யார் தெரியுமா” என்பதுதான். கேள்வியில் இருக்கும் அதிகார தொனியிலேயே பாதி காவலர்கள் பயந்துவிடுவதுண்டு. ஆனால், ‘எனக்கு ஐ.ஜிய தெரியும், ஆனா அவருக்கு என்னை தெரியாது’ வகையைச் சேர்ந்ததாக இருக்கும். ஆனால், அதற்கும் முடிவுகட்ட மத்திய அரசு தயாராகி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் சாமானியர்களுக்கும் இருவேறு சட்டம் என்ற நிலை இனி இருக்காது என எதிர்பார்க்கலாம்.

’போக்குவரத்து விதிகளை மீறினால் இனி முதலமைச்சரே ஆனாலும் அபராதம் செலுத்த வேண்டி வரும்’ என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். போக்குவரத்து சட்டங்களை தவறாக பயன்படுத்தும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொருட்டு அதிநவீன நுண்ணறிவு போக்குவரத்து கண்காணிப்பு சாதனங்கள் மாநிலங்கள் அனைத்திலும் பொறுத்தப்படவுள்ளதாக கட்கரி தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து காவலர்களுக்கான ஏ.டி.எம் இயந்திரங்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கட்கரி குறிப்பிட்டுள்ளார். கட்கரி இதைச் சொன்னது டெல்லியில். அங்கே ஆட்சியில் இருப்பது கெஜ்ரிவால். எனவே, கெஜ்ரிவாலுக்கான எச்சரிகையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.