முதலமைச்சரான எடியூரப்பா! சசிகலா வெளியேறுவதில் சிக்கல்!! இதுக்குதான் பாஜகவிடம் வாலாட்டக்கூடாது!!

 

முதலமைச்சரான எடியூரப்பா! சசிகலா வெளியேறுவதில் சிக்கல்!! இதுக்குதான் பாஜகவிடம் வாலாட்டக்கூடாது!!

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா ஆட்சி வந்துள்ளதால் சசிகலா முன்கூட்டிய படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா ஆட்சி வந்துள்ளதால் சசிகலா முன்கூட்டிய வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அ.தி.மு.க ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவந்தது.  2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி இந்த வழக்கில், `ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் சசிகலா உட்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குன்ஹா. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சசிகலா-இளவரசி

இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்குள் ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்ததோடு, குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். 

இதையடுத்து, 2017 பிப்ரவரி 15-ம் தேதி  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நன்னடத்தை விதிகளின் படி சிறைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஒரு கைதி விடுதலை செய்யப்படவேண்டுமானால் அதனை மாநில நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு கைதி தனது தண்டனை காலத்தில் 75 சதவீத நாட்களை சிறையில் கழித்து இருந்தால்தான் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, 2020 பிப்ரவரி மாதம் வரை விடுதலை ஆவதற்கு வாய்ப்பே இல்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். எட்டியூரப்பா

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா ஆட்சி வந்துள்ளது. சசிகலாவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஏற்கனவே மோதல் நீடிக்கும் சூழலில் சசிகலாவை பாஜக தலைமையிலான கர்நாடக அரசு முன்கூட்டியே விடுதலை செய்யபடுமான என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.