முதன் முறையாக…தமிழரசன் படத்துக்காகத் தனது வீட்டிலேயே இசையமைத்த ‘இசைஞானி இளையராஜா’..

 

முதன் முறையாக…தமிழரசன் படத்துக்காகத் தனது வீட்டிலேயே இசையமைத்த ‘இசைஞானி இளையராஜா’..

எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி- ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழரசன்’.

எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி- ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழரசன்’.

ttn

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ttn

தனது 40 ஆண்டுகள் இசைப் பயணம் முழுவதுமாக பிரசாத் ஸ்டுடியோவிலேயே இசையமைத்து வந்த இசைஞானி, சில பிரச்சனைகளின் காரணமாக அங்கு தனது இசைப்பயணத்தைத் தொடரமுடியவில்லை.

ttn

அதனால், முதன் முறையாக இளையராஜா அவரது இல்லத்தில் ‘தமிழரசன்’ படத்துக்காக இசையமைத்துள்ளார். தனது வீட்டிலேயே இளையராஜா இதுவரை யாருக்கும் இசையமைத்துக் கொடுத்ததில்லை. இந்த படத்திற்காக ஒட்டு மொத்த வாத்தியக் கலைஞர்களையும் தனது வீட்டிற்கு அழைத்து லைவ் ஆக இசையமைத்து அசத்தி வருகிறார். 

ttn

ஒரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசைஞானி இசையமைத்ததும் இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ttn

இந்த பாக்கியத்தை, விஜய் ஆண்டனியும் தமிழரசன் படக்குழுவும் பெற்றுள்ளது. இசைஞானியின் இசையமைப்பில் வெளியாக உள்ளதால், 2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக இது நிச்சயமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.