முதன் முறையாக ஓலைச் சுவடிகளும் பழைய நூல்களையும் ஆன்லைனில் பதிவேற்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்…

 

முதன் முறையாக ஓலைச் சுவடிகளும் பழைய நூல்களையும் ஆன்லைனில் பதிவேற்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்…

பழைமையான நூல்களைப் பாதுகாத்து பின் வரும் சந்ததியினருக்கு அளிக்கும் விதமாகக் காமராஜர் பல்கலைக்கழகம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக் கழகத்தில் தொ.பி.மீனாட்சி சுந்தரம் நூலகம் உள்ளது. அதில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பழமையான புத்தங்கங்களும், ராமாயணம் , சிவஞான போதம் உள்ளிட்ட 30 ஓலைச்சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளது. இந்த பழைமையான நூல்களைப் பாதுகாத்து பின் வரும் சந்ததியினருக்கு அளிக்கும் விதமாகக் காமராஜர் பல்கலைக்கழகம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

Madurai kamaraj university

பழைய நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் ஸ்கேனர் கருவியைக் கொண்டு ஸ்கேன் செய்து அதனை ஆன்லைனில் வெளியிடப் போவதாகவும் அதனை மாணவர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் காமராஜர் பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தகைய புதிய வகை முயற்சியின் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள நூல்களைப் பாதுகாப்பதோடு, பழைய காலத்துப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்ட ஒரு வாய்ப்பாகத் திகழ்கிறது. 

Tile

இது குறித்துப் பேசிய, காமராஜர் பல்கலைக் கழக துணை வேந்தர் கிருஷ்ணன், நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மட்டுமல்லாது, மக்களிடம் இருக்கும் புத்தகங்களையும் காமராஜர் பல்கலைக் கழகத்தின் இருக்கும் நூலகத்தில் கொண்டு வந்து இ-புக் முறையில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.