முதன்முறையாக பொதுநிகழ்வில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோர்

 

முதன்முறையாக பொதுநிகழ்வில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர் பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர்.

பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்ற இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், அவருக்கு வெற்றியை தேடித்தந்தார்.

2018 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரவித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதையடுத்து தமிழகத்துக்குள் நுழைந்த பிரசாந்த், திமுகவுக்கு தேர்தல் பணிகளை செய்வதாக ஒப்புக்கொண்டார். 

prashant kishor

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் இன்று தமிழகம் வந்திருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். இதுவரை எந்தவொரு பொதுநிகழ்விலும் கலந்துகொள்ளாத பிரசாந்த் கிஷோர், முதன்முறையாக திமுக குடும்பத்தின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.