முதன்முறையாக சென்னையில் தொடங்கியது மின்சார பேருந்து சேவை!

 

முதன்முறையாக சென்னையில்  தொடங்கியது மின்சார பேருந்து சேவை!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக  அம்மா பேட்ரோல் என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தையும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னையில் முதன்முறையாக மின்சார பேருந்துகளின் சோதனை முறை சேவையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

bus

மின்சார பேருந்துகள் சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை 28 கி.மீ. தூரம் வரை  சோதனை ஓட்டத்தில் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தின் பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்டது.இதில் 32பேர் அமர்ந்து கொண்டும், 25 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யலாம். குளிர்சாதன வசதி மற்றும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கும். 

patrol

இதை தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக  அம்மா பேட்ரோல் என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தையும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக  40 ரோந்து வாகனங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.