முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

 

முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா

பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஸ்டான்ட் அப் காமெடியனாக கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. நிகழ்ச்சி ஆரம்பத்தில் தனியாக காமெடி செய்து வந்த நிஷா பின்னர் பழனியுடன் செய்து காமெடி செய்து வந்தார். தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

 


 

ரியாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில் நிஷாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்துள்ள அவர் தானும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

 

 

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ttnttn

இதை கண்ட அவரது ரசிகர்கள் குழந்தைகளை உங்களை போலவே உள்ளது என்றும் குழந்தைக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தி வருகின்றனர்.