‘முட்புதரில் கொட்டப்பட்ட 500கிலோ அரிசி’..அடுத்த வேளை உணவுக்காக வாரிச்சென்ற கிராம மக்கள்!

 

‘முட்புதரில் கொட்டப்பட்ட 500கிலோ அரிசி’..அடுத்த வேளை உணவுக்காக வாரிச்சென்ற கிராம மக்கள்!

உணவு இல்லாமல் தவித்து வரும் இந்த நிலையில், சுமார் 500கிலோ அரிசி முட்புதரில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடே முடங்கியுள்ளது. இதனால் சாலையில் வசிப்போர் உணவு இல்லாமல் திணறி வருகின்றனர். அதே போல ஏழை,எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு அம்மா உணவகங்களில் இலவச உணவு, உணவு கூடங்கள் அனைத்து மக்களுக்கு உதவி வருகிறது. கொரோனா வைரஸால் மக்கள் உணவு இல்லாமல் தவித்து வரும் இந்த நிலையில், சுமார் 500கிலோ அரிசி முட்புதரில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tn

தேனி மாவட்டம் போடியில் மயானம் செல்லும் பாதையில் அதிகமாக முட்புதர்கள் இருக்கிறது. அங்கு அரசியல் குவியல் குவியலாக கொட்டிக் கிடப்பதை பார்த்த கிராம மக்கள், அதில் புழு, பூச்சி இருப்பதை பொருட்படுத்தாமல் அள்ளிச் சென்றனர். கொரோனாவால் வருமானமின்றி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மக்கள் அடுத்த வேளை உணவுக்காக அந்த அரிசியை அள்ளிச் சென்றது காண்போர் மனதை கணக்க செய்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்ட அரிசி புழு பிடித்ததால் அங்கு கொட்டப்பட்டதா அல்லது கடத்தல் அரிசியா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.