முட்டை கோஸும் பர்கரில் வைக்கப்படும் லெட்டியூசம்  ஒண்ணா… உண்மையை தெரிஞ்சுக்கோங்க.! 

 

முட்டை கோஸும் பர்கரில் வைக்கப்படும் லெட்டியூசம்  ஒண்ணா… உண்மையை தெரிஞ்சுக்கோங்க.! 

நம் வீடுகளில் அதிகம் சமைக்கப்படும் முட்டை கோஸ் உடலுக்கு நார்சத்து தரும் காய்கறி அதேபோல பர்கர்களில் அதிகம் சேர்க்கப்படும் லெட்டியூசும் நார்சத்து அதிகம் கொண்டுள்ளதுதான் ஆனால் ரெண்டும் ஒன்றல்ல.அவை இரண்டும் மொத்தத்தில் வேறு குணங்களைக்கொண்டவை.

நம் வீடுகளில் அதிகம் சமைக்கப்படும் முட்டை கோஸ் உடலுக்கு நார்சத்து தரும் காய்கறி அதேபோல பர்கர்களில் அதிகம் சேர்க்கப்படும் லெட்டியூசும் நார்சத்து அதிகம் கொண்டுள்ளதுதான் ஆனால் ரெண்டும் ஒன்றல்ல.அவை இரண்டும் மொத்தத்தில் வேறு குணங்களைக்கொண்டவை.

lettuce

காய்கறிகளை பொறுத்தவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவைகளாய் இருக்கலாம் ஆயினும் அவைகளின் குணங்கள் வெவ்வேறாக இருக்கும்.குறிப்பாக காலி பிளவர் – ப்ரோக்கோலி;முட்டை கோஸ் – லெட்டூஸ் ஆகியவை.இவை தன் வடிவம்,தோற்றம்,சத்துக்கள்,கலோரிகள்,சுவை ஆகியவைகளில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும்.

முட்டைகோஸ் லெட்டியூஸ் இவைகளின் வித்தியாசங்களை அறிந்துகொள்வோம்:

1.கலோரி அளவு:

cabbage

முட்டை கோஸின் 100 க்ராமில் 25 கலோரிகலும் லெட்டியூஸின் 100 க்ராமில் 14 கலோரிகலும் இருக்கப்பெற்றிக்கும்.ஆனால் நார்சத்தில் முட்டை கோஸ் தான் டாப்பில் இருக்கிறது அதனால் தான் நாம் வீடுகளில் முட்டைகோஸ் பொரியல் அதிகம் சமைக்க படுகிறது.

2.வளரும் தன்மை:

cabbage

முட்டைகோஸ் லெட்டியூஸ் ஆகியவைகளுக்கு வெவ்வேறு சீதோஷண நிலைகளில் வளரக்கூடியவை.முட்டை கோஸ் குளிர்பாங்கான இடங்களில் வளரும் தன்மையுடையது.மேலும் அது வளர மண்ணின் pH அளவு – 6.5 மேல் இருக்க வேண்டும் ஆனால் லெட்டியூஸ் அதற்கு நேர்மாறாக சூடான/மிதமான சூடில் வளரும்,மற்றும் மண்ணின் pH அளவு – 6 முதல் 7 இருக்க வேண்டும்.

3.சுவை:

முட்டை கோஸ் ஸ்டராங் நறுமணமும் ருசியும் பெற்றிருக்கும் அதனால் தான் இதனை மற்ற காய்களுடனும் சேர்க்கின்றனர்.ஆனால் லெட்டியூஸ் மிகவும் க்ரஞ்சியாக இருக்கும்,

burger

வாசனை இல்லாததாய் இருக்கும் ஆகவே இதனை சாலட்,சாண்ட்விச்,பர்கர் ஆகியவவைகளில் சேர்க்கின்றனர்.

4.சத்து:

முட்டை கோஸ் அதிக சத்துக்களுடனும் வைட்டமின் C மற்றும் டியட்டரி நார்சத்தில் அதிகம் பெற்றிருக்கிறது அதேபோல லெட்டியூசும் ஒண்ணும் சளைத்ததல்ல இதுவும் வைட்டமின் A மற்றும் போலிக் ஆசிட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

lettuce

இரண்டும் அவைகளின் சத்துக்களில் சீராக வைத்துள்ளது.

5.தோற்றம்:

முட்டை கோஸ் குட்டையான காம்புடனும் அதன் உள் இலைகளுடன் ஒப்பிடுகையில் அதன் வெளி இலைகள் சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும் அதனால் அதன் வெளி இலைகளை நீக்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர் ஆனால் லெட்டியூஸின் காம்பு சிறியதாக இருக்கும்,

cabbage

ஆனால் இதன் இலைகள் முட்டை கோஸைவிட அதிக க்ளோரோபில் இருப்பதானல் இவை அதிக பச்சை நிறத்துடன் இருக்கும்.

ஆதலால்,நீங்கள் உடல் எடை குறைப்பில் இருந்தால் கலோரி அளவில் குறைவான லெட்டியூஸை தேர்வு தேர்வுசெய்வதே புத்திசாலித்தனம்!