முட்டையுடன் இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க…!

 

முட்டையுடன் இதையெல்லாம் கண்டிப்பா சாப்பிடாதீங்க…!

பால், தண்ணீர் என்று எல்லாவற்றிலுமே கலப்படம் வந்து விட்டது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவு என்று ஆசையாசையாய் சமைத்து தருகிறோம். சுவைக்காகவும், சத்துக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், எளிதில் சமைக்க முடிவதாலும் பல சமயங்களில் காலை உணவிலும், இரவு நேர உணவிலும் கூட முட்டையைச் சேர்த்துக் கொள்கிறோம். முட்டை ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பால், தண்ணீர் என்று எல்லாவற்றிலுமே கலப்படம் வந்து விட்டது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவு என்று ஆசையாசையாய் சமைத்து தருகிறோம். சுவைக்காகவும், சத்துக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், எளிதில் சமைக்க முடிவதாலும் பல சமயங்களில் காலை உணவிலும், இரவு நேர உணவிலும் கூட முட்டையைச் சேர்த்துக் கொள்கிறோம். முட்டை ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சாப்பிடத் தெரியாமல் முட்டையுடன் சேர்த்து வேறு சில பொருட்களையும் சேர்த்தோ, முட்டைக்கு பிறகோ சாப்பிட்டால் பல பிரச்சனைகளை நாமே வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது போல் ஆகிவிடும். அதனால், முட்டை எப்பொழுது சாப்பிட்டாலும் இந்த பொருட்களை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

egg

பொதுவாக உணவு உட்கொண்ட பின்னர் பழங்களைச் சாப்பிடுவது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. அதிலும் முட்டை சாப்பிட்ட பிறகு ஆப்பிள், பேரிக்காய், திராட்சை போன்ற பழங்களை நிச்சயமாக சாப்பிடக் கூடாது. இந்த பழங்களில் அதிகளவில் புரோட்டீன்கள் இருக்கிறது. எந்த பழங்களாக இருந்தாலும் 15 நிமிடத்தில் செரிமானம் அடைந்து விடும். ஆனால் முட்டை செரிமானம் அடைய நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. இதனால் குமட்டல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுடன் கடுமையான இரைப்பை அழற்சிக்கும் ஆளாக நேரிடும்.

egg

ஒரே நாளில் குழந்தையை புஷ்டியாக்குகிறேன் என்று சிலர் காலை நேரத்திலேயே முட்டையைக் கொடுத்து விட்டு, கூடவே சோயா பாலையும் குடிக்க கொடுப்பார்கள். சோயா பால் சத்து நிறைந்தது தான். முட்டையும் ஆரோக்கியமான உணவு தான். ஆனால், முட்டையுடன் சோயா பால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முட்டைகளில் உள்ள புரதம் சோயா பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது உடல்களில் சிதைவு பிரச்சினையை ஏற்படுத்துவதுடன் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது. 
பொதுவாகவே அசைவ உணவை உட்கொண்ட பிறகு டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால் நீங்கள் முட்டை சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது ஆரோக்கியமான  செயல் கிடையாது. காரணம்,  தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டினுடன் சேர்வது நமது உடலுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும். மேலும் இதனால் நமது குடல் இயக்கங்கள் பாதிப்பதுடன் நமது உடலில் தேங்கும் நச்சுப்பொருட்களின் அளவும் அதிகரிக்கும். 

egg

உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முட்டையில் இருந்து கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நமது உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் ஒரே உணவில் சேர்ப்பது தவறாகும். இப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வதால் இரண்டில் இருந்துமே ஒரு சத்தும் கிடைக்காது. தவிர, இவற்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.