முடி கொட்டுகிறதா? கவலை வேண்டாம்… இந்த 5 காய்கறிகளை தலைக்கு யூஸ் பண்ணாலே போதும்!?

 

முடி கொட்டுகிறதா? கவலை வேண்டாம்… இந்த 5 காய்கறிகளை தலைக்கு யூஸ் பண்ணாலே போதும்!?

சிலருக்கு முடி கொட்டும் பிரச்னை பெரும் தலைவலியாக இருக்கும். அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்

சிலருக்கு முடி கொட்டும் பிரச்னை பெரும் தலைவலியாக இருக்கும். அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். முடி உதிர்வதை போக்க சிலர் ஆயில் மசாஜ், ஹேர் ஸ்பா என்று எது செய்தும் பலனில்லாமல் சோகத்தில் மூழ்கி கிடப்பார்கள். கவலை வேண்டாம் காய்கறிகள் மூலமாகவே உங்கள் முடி உதிவை நீங்கள் எளிதில் கட்டுப்படுத்தலாம். 

வெங்காயம் 

onion

வெங்காயத்தை நாடு அரைத்து அதில் சிறிதளவு தேனை கலந்து கொள்ளுங்கள். பின்பு வெங்காய வாசத்தை கட்டுப்படுத்த சிறிது ரோஸ்  வாட்டரை கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த கலவையை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் தலைமுடியை அலச வேண்டும். அப்படி செய்து வாரத்திற்கு 2 முறை செய்து வர முடி கொட்டும் பிரச்னை குறையும். 

உருளைக் கிழங்கு 

poato

உருளை கிழங்கு சாறுடன் சிறிது  தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். கிடைத்த இந்த கலவையை 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசினால் முடி மிருதுவாக மாறுவதுடன் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். 

பூண்டு

gARLIC

முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

கொத்தமல்லி 

malli

கொத்தமல்லிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதை பிழிந்து  அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசி வரவேண்டும். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் முடி கொட்டுவது குறைவதுடன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். 

கேரட் 

carrot

கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30 நிமிடத்திற்குப் பின் முடியை அலசவும். கேரட்டில் விட்டமின் சி உள்ளதால் அது முடியின் வேர்களுக்கு பலத்தை கொடுக்கும்.