முடிவெட்டச் சென்ற போது உயிரை விட்ட பரிதாபம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

முடிவெட்டச் சென்ற போது உயிரை விட்ட பரிதாபம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

தமிழகத்தில் விநேதமான உணவு கலாசாரம் ஒன்று பரவி வருகிறது. தினந்தோறும் இரவுகளில் பரோட்டா, ப்ரைட் ரைஸ் என்று இளைஞர்கள் பாஸ்ட் புட் கடைகளை நோக்கி படையெடுத்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சமீப காலமாக இந்த முறையற்ற வாழ்க்கை பழக்க வழக்கங்களால் இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி திருமணத்திற்கு தயாராகி, பெண் பார்த்து வரும் நிலையில், முடிவெட்டிக் கொள்ள சென்ற இளைஞர் பரிதாபமாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன். எப்போதும் கூட்டமாக இருக்கும் இவரது சலூன் கடை அன்று வெறிச்சோடியிருந்தது. வேகவேகமாக இவரது கடைக்கு முடி திருத்தம் செய்து கொள் இளைஞர் ஒருவர் வந்தார். சரவணனும் அவருக்கு முடிவெட்டத் துவங்கினார். முடி வெட்டிக் கொண்டிருந்த போதே அந்த இளைஞர் சேரிலேயே மயங்கி விழுந்தார். என்னவோ ஏதோ என்று பதறியடித்த சரவணன், அந்த இளைஞரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்தார். அவரது எந்த முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின் இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினார்கள். தகவல் அறிந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் அஞ்சுகம் காலனியைச் சேர்ந்த வினோத் என்பதும், சிதம்பரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. திருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் இளைஞர் வினோத் மாரடைப்பால் இறந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்குது. வீட்டு சாப்பாடை பெரும்பாலான இளைஞர்கள் தவிர்த்து விடுவதும், சுத்தமில்லாமல் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதாலும், மன அழுத்தத்தினாலும் இளைஞர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.