முடிவுக்கு வரும் மகா அரசியல் ! இடைக்கால சபாநாயகர், எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பு !

 

முடிவுக்கு வரும் மகா அரசியல் ! இடைக்கால சபாநாயகர், எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பு !

மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்காரை நியமித்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி.

மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்காரை நியமித்தார் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி. மகாராஷ்டிரா சட்டசபையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள  எம்எல்ஏக்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை வரவேற்றுக்கொண்டிருந்த சுப்ரியா சுலே அஜித்பவாரை கட்டித்தழுவி அன்புடன் வரவேற்றார். 

supriya

மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை சிவாஜி பூங்காவில் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த சரத்பவாரின் மருமகன் அஜீத் பவார் ஆதரவளிக்க பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக கடந்த சனிக்கிமை பொறுப்பேற்றுக்கொண்டார். அஜீத் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

mp

பட்னாவிஸ் ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை துணை முதல்வர் அஜித் பவார். தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் தனக்கு போதிய பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது பதவி ராஜினாமா செய்தார்.