முடிவுக்கு வந்த இரண்டு மாதகாலப் பஞ்சாயத்து…இரண்டு படங்களுக்கு சம்பளம் இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்ட ‘களவாணி’ நடிகர்…

முடிவுக்கு வந்த இரண்டு மாதகாலப் பஞ்சாயத்து…இரண்டு படங்களுக்கு சம்பளம் இல்லாமல் நடிக்க ஒத்துக்கொண்ட ‘களவாணி’ நடிகர்…

பிரச்சினையின் மையப்புள்ளியான நடிகர் விமல் பஞ்சாயத்துக்கு நேரில் ஆஜராகி கடன் வாங்கிய பணத்துக்கு உத்தரவாதம் தந்ததை ஒட்டி கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த ‘களவாணி 2’ பட மோதல் முடிவுக்கு வந்தது.

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குனர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது.

vimal

இது தொடர்பாக இயக்குநர் சற்குணமும் விநியோகஸ்தர் சிங்காரவேலனும் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கடுமையாக மொதிக்கொண்டனர். ஒருவர் மீது சேற்றை வாரி இறைத்தனர். ஒரு கட்டத்தில் பிரச்சினையின் நாயகன் விமல்தான் என்று தெரியவந்த நிலையில் அவரை இருதரப்பும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் வராமல் எஸ்கேப் ஆகிவந்தார்.

விமல் நேரில் வராமல் படம் ரிலீஸாகாது என்கிற உண்மையைப் புரிந்துகொண்ட சற்குணம் அவருக்கு மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கவே வேறு நேரில்  வழியின்றி சிங்காரவேலனை நேற்று சந்தித்தார். அச்சந்திப்பில் விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர்.

இறுதியாக சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் ’களவாணி – 2’ படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது. எனவே இம்மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது.