முடிவுக்கு வந்த அயோத்தி வழக்கு!முஸ்லிம்களுக்கு மாற்று இடம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

 

முடிவுக்கு வந்த அயோத்தி வழக்கு!முஸ்லிம்களுக்கு மாற்று இடம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தி வழக்கில், முஸ்லிம்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

70 ஆண்டு கால அயோத்தி பிரச்னைக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் அறை எண் 1ல் அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 

5 நீதிபதிகள் அமர்வு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அயோத்தி வழக்கு தீர்ப்பை சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் வாசித்தார். பாபர் மசூதி மிர் பாக்கி கட்டினார். நீதிமன்றம் இறையியல் பகுதிக்கு வருவது பொருத்தமற்றது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து மத சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை உறுதி செய்கிறது. 1949ல் சிலைகள் அந்த பகுதியில் நிறுவப்பட்டது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

பிரச்சினைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு சான்றுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவை மற்றும் கண்டுபிடிப்புகளை புறக்கணிக்க முடியாது. தொல்பொருள் சான்றுகளை அனுமானம் அல்லது கருதுகோள் என ஒதுக்கிவைக்க முடியாது. பாபர் மசூதி காலியாக உள்ள நிலத்தில் கட்டப்படவில்லை. ஆனால் ஒரு இந்து கட்டமைப்பின் மேல் கட்டப்பட்டுள்ளது.

அயோத்தி

அந்த கட்டமைப்பு இந்து தோற்றம் உள்ளதாக  தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. நில உரிமையை சட்டப்பூர்வமான ஆதாரங்கள் மட்டுமே முடிவு செய்யும். மசூதியை இடித்தது வன்முறை. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம். மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.