முடிவுக்கு வந்தது இலவச சலுகை ! 50% வரை கட்டணம் உயர்வு ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

 

முடிவுக்கு வந்தது இலவச சலுகை ! 50% வரை கட்டணம் உயர்வு ! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி !

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணத்தை சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. இதன் மூலம் இதுநாள் வரை வாடிக்கையாளர்கள் அனுபவித்து வந்த சலுகை முடிவுக்கு வந்துள்ளது. 
3 ஆண்டுகளுக்கு பின்னர் செல்போன் அழைப்புக் கட்டணங்களை கடும் நிதி நெருக்கடி காரணமாக உயர்த்தியுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. 

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் செல்போன் நிறுவனங்கள் அழைப்பு கட்டணத்தை சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தி உள்ளன. இதன் மூலம் இதுநாள் வரை வாடிக்கையாளர்கள் அனுபவித்து வந்த சலுகை முடிவுக்கு வந்துள்ளது. 

3 ஆண்டுகளுக்கு பின்னர் செல்போன் அழைப்புக் கட்டணங்களை கடும் நிதி நெருக்கடி காரணமாக உயர்த்தியுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளது

jio

. ஜியோ நிறுவனத்தின் ஆல் இன் ஒன் பிரிபெய்டு திட்டத்தில் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டாலும், 300 சதவீதம் வரை வாடிக்கையாளர்களுக்கு பயன்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து ஏர்டெல்லில் அறிவித்துள்ள புதிய கட்டடண விகிதம் என்னவென்று பார்ப்போம். ரூ..148 (28 நாட்கள் அளவில்லா அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ்.) ரூ.1,498  (365 நாட்களுக்கு அளவில்லா அழைப்புகள், 3,600 எஸ்.எம்.எஸ்., 24 ஜிபி டேட்டா), ரூ.2,398 (தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1.5 ஜிபி டேட்டா), ரூ.248 (28 நாட்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ். 1.5 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள்) ரூ.298 (தினமும் 100 எஸ்.எம்.எஸ். 2 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள்), ரூ.598 (84 நாட்கள் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 2 ஜிபி டேட்டா, அளவில்லா அழைப்புகள்)

call

இதேபோல டிசம்பர் 3 முதல் வோடபோன் நிறுவனங்கள் புதிய கட்டண விகிதத்தை அமல்படுத்தப்பட உள்ளது. முதலில் ரீசார்ஜ்செய்வதற்கான கூப்பன் விலை ரூ.97. இதில் 45 ரூபாய்க்கு பேசிக்கொள்ளலாம். 100 எம்பி டேட்டா மற்றும் கால் கட்டணம் 1 பைசா நிமிடத்திற்கு வசூலிக்கப்படும். ரூ.197, ரூ.297, ரூ.647 திட்டங்களை ரீசார்ஜ் செய்து தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகளை 84 நாட்கள் வரை பெறலாம்.
இதேபோல் ரூ. 149 (28 நாட்கள் 1,000 நிமிட அழைப்புகள் 2 ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்எஸ்.), ரூ.249 (28 நாட்கள், 1,000 நிமிட அழைப்புகள், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.). இதில் ரூ.49 மற்றும் ரூ.79 ரீசார்ஜ்கள் இனி கிடையாது.