முடிந்தது புரட்டாசி விரதம் ! இறைச்சிக் கடையில் விற்பனை அமோகம்

 

முடிந்தது புரட்டாசி விரதம் ! இறைச்சிக் கடையில் விற்பனை அமோகம்

புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை அடுத்து விரதம் கடைபிடித்து வந்த இந்து சமய பக்தர்கள் தற்போது அசைவ உணவு வாங்க மீன் மார்க்கெட் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் அலை மோதுகின்றனர்.

புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதை அடுத்து விரதம் கடைபிடித்து வந்த இந்து சமய பக்தர்கள் தற்போது அசைவ உணவு வாங்க மீன் மார்க்கெட் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் அலை மோதுகின்றனர்.

fish2

பெருமாள் கடவுளுக்கு உகந்த மாதமாகக் புரட்டாசி கருதப்படுவதால் பக்தர்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். இதனால் அசைவ உணவை பெரும்பாலோனோர் புரட்டாசி மாதத்தில் முழுமையாகத் தவிர்த்து விடுவர். இந்நிலையில், புரட்டாசி மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து சேலத்தில் மீன் மார்க்கெட் மற்றும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.மீன் மார்க்கெட்டில் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்லா மீன் ரூ.180 ரூபாய்க்கும், ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சரம் மீன் ரூ.700-க்கும், ஆட்டுக்கறியின் விலை ரூ.600-க்கும் விற்பனை செய்யபட்டது. மீன் விற்பனை குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் என்பதால் கடந்த ஒரு மாதமாகவே மீன், கோழி, ஆட்டுக் கறியின் விலை குறைவாக விற்கப்பட்டது.

fish

தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி தொடங்கியுள்ளதால், வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை காசிமேடு, திருவொற்றியூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. சென்னையில் வஞ்சிரம் கிலோவுக்கு 700 ரூபாய்க்கும், வவ்வால் 450, ஷீலா 300, இறால் 300, நண்டு 200, சங்கரா 200 ரூபாய் என மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. வஞ்சிரம், பாறை, கொடுவா, சங்கரா, மத்தி, கிழங்கா உள்ளிட்ட மீன்களின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது. இதனால் கிடைக்‍கும் மீன்களை வாங்க மக்கள் போட்டிப்போட்டு கொண்டு வாங்குகின்றனர்.