முடிஞ்சாச்சு லீவு… அம்மாக்களுக்கான டென்சன் ஃப்ரீ யோசனைகள்

 

முடிஞ்சாச்சு லீவு… அம்மாக்களுக்கான டென்சன் ஃப்ரீ யோசனைகள்

நாள் முழுவதும் சோம்பேறித்தனாமாய் டி.வி.யிலும், மொபைல் ஃபோனிலும் மூழ்கிக் கிடந்த நம் வீட்டு வாண்டுகளுக்கு விடுமுறை ப்ரேக் முடிஞ்சு ஸ்கூல் கிளம்பும் நேரம் வந்து விட்டது. பசங்கத் தானே படிக்கப் போறாங்க என்று அவ்வளவு ஈஸியா எடுத்துக்கற விஷயம் கிடையாது இது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, குளிச்சு டிபன் செய்ய ஆரம்பித்து,  நாள் முழுக்க கிச்சன்ல நாம அவிஞ்சுக் கிடந்து சமைச்சாலும், வெரைட்டி இல்லைன்னு ரிஜக்ட் பண்ணி டென்ஷன் ஏத்துற பசங்க தான் அதிகம்.

நாள் முழுவதும் சோம்பேறித்தனாமாய் டி.வி.யிலும், மொபைல் ஃபோனிலும் மூழ்கிக் கிடந்த நம் வீட்டு வாண்டுகளுக்கு விடுமுறை ப்ரேக் முடிஞ்சு ஸ்கூல் கிளம்பும் நேரம் வந்து விட்டது. பசங்கத் தானே படிக்கப் போறாங்க என்று அவ்வளவு ஈஸியா எடுத்துக்கற விஷயம் கிடையாது இது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, குளிச்சு டிபன் செய்ய ஆரம்பித்து,  நாள் முழுக்க கிச்சன்ல நாம அவிஞ்சுக் கிடந்து சமைச்சாலும், வெரைட்டி இல்லைன்னு ரிஜக்ட் பண்ணி டென்ஷன் ஏத்துற பசங்க தான் அதிகம்.

school

நம்மளோட பிளட் ஃப்ரெஷரும் ஏறக்கூடாது, பசங்களும் சந்தோஷமா ஸ்கூலுக்கு கிளம்ப ஆரம்பிக்கணும்னா சில எளிய விஷயங்களை இப்பொழுதிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பியுங்க…

1. பள்ளி திறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிலிருந்தே குழந்தைகள இரவு சீக்கிரம் துங்க சொல்லிப் பழக்கப்படுத்துங்க. அப்பொழுது தான் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பார்கள்.  
2. டைம்டேபிளுக்கு ஏற்றபடி முதல் நாளே புத்தகம்,நோட்,பேனா,பென்சில், யூனிஃபார்ம் அயர்னிங், ஷூ பாலீஷ் என்று அனைத்தை விஷயங்களையும் ஞாபகப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்தால் நமக்கு பள்ளிக்கு டைம் ஆயிடுச்சுன்னு காலை நேரத்துல டென்ஷன் ஏறாது.
3 . தினம் தினம் வகுப்பில் நடத்துகிற பாடங்களையும், ஹோம் வொர்க் முதலியவற்றை அன்றைய தினமே செய்து முடிக்க அறிவுறுத்துங்கள். அவர்களது பள்ளி வேலைகளை சரியாக தினமும் முடித்தால் தான் தொலைக்காட்சிக்கோ, விளையாடுவதற்கோ நேரம் அனுமதியுங்கள்.
4.பள்ளிக்கூடம் என்பது படிப்பை மட்டுமல்ல நம் எண்ணங்களையும்  நமது வாழ்க்கையும்  செதுக்குகிற இடம் என்கிற பாசிட்டிவ் எண்ணங்களை சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.

students

5. ஸ்கூல் முடிஞ்சு நேராக ட்யூசன், பிற விளையாட்டுக்கள், நீட் கோச்சிங் என்று இயந்திரத்தனமாய் மாணவர்களை மாற்றி வைத்திருக்கிற சமூகம் இது. நாமும் அவர்களை எரிச்சலாக்காமல், அவர்களைக் கூடுமானவரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
6. மேலே நீங்கள் படித்த ஐந்தாவது விதியை சரியாய் பயன்படுத்தினால் தான் 6வது விதி கைமேல் பலன் கொடுக்கும். தினமும் ஏதாவது ஒரு அரை மணி நேரம் உங்கள் குழந்தைகள் உங்களிடம் மனம் விட்டு பேசுவதற்காக ஒதுக்குங்கள். தினமும் வகுப்பறையில், நண்பர்கள் மத்தியில், டியூசனில் நடந்த விஷயங்களை உங்களிடம் மறைக்காமல் சொல்வதற்கு குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்துங்கள். அப்படி அவர்கள் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் போதே, அட்வைஸ்களை ஆரம்பித்தோ, விஸ்வரூப தரிசனம் கொடுத்து அடுத்தமுறை அவர்களை பேசவிடாமலோ செய்யாமல், அவர்கள் சொல்வதை முழுவதுமாக காது கொடுத்துக் கேளுங்கள்.

7.நம் குழந்தைகளின் மனதில் தேவையற்ற பயம் , வீண் பிடிவாதம் முதலிய விஷயங்களை அகற்றுவதற்கு அவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு மட்டும் தான் நல்ல பலன் தரும். அன்பே சிவம். அன்பே அல்லா. அன்பே ஜீசஸ். அன்பே எல்லாமுமாகும். உங்களை அன்பானவர்களாக மாற்றிக் கொள்ளும்.

school

8. எதிர் வீட்டு அங்கிள்ல ஆரம்பிச்சு, ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர் வரையில் எவரையுமே நம்ப முடியாத தூரத்தில் வைத்து சந்தேகப்பார்வை பார்க்க தான் நம் சமூகம் நம்மை பழக்கியிருக்கிறது. அதை குழந்தைகளிடம் சரியாக அறிவுறுத்துங்கள்.
9. உங்களைத் தவிர யார் அழைத்தாலும், பள்ளியிலிருந்து அவர்களுடன் செல்லக் கூடாது என்று அறிவுறுத்துங்கள். உங்கள் குடும்பத்திற்கென்று சீக்ரெட் பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் தானே என்று குழந்தை பாஸ்வேர்ட் தெரியாத நபர்களிடம் செல்லாமல் இருக்க உதவியாய் இருக்கும்.
10. முக்கியமாக ஆரோக்கியத்திற்கு அடுத்து தான் படிப்பு என்பதை அறிவுறுத்துங்கள். நீங்களும் மறந்து விடாதீர்கள். காய்கறி, பழங்களிலிருக்கும் சத்துக்களைச் சொல்லி அறிமுகப்படுத்துங்கள். துரித உணவுகளுக்கு பதிலாக முளை கட்டிய பயிறு வகைகள், சிறுதானிய பலகாரங்கள், பச்சைக் காய்கறிகள் என்று ஸ்நாக்ஸ் சாப்பிட பழக்கப்படுத்துங்கள். தினமும் ஏதாவது ஒரு பழ வகைகள் சாப்பிடச் செய்யுங்கள். முக்கியமாக நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்துங்கள்.
நமது செல்லக் குழந்தைகள் அறிவாளிகளாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் வளரட்டும்.