முடங்கிய கணவரால் தொடங்கிய கள்ளக்காதல்- “கள்ள உறவை தடுத்தார் ,உயிரை எடுத்தார்” -குடியிருந்தவரோடு குஜாலாக இருந்த பெண் படுகொலை .. 

 

முடங்கிய கணவரால் தொடங்கிய கள்ளக்காதல்- “கள்ள உறவை தடுத்தார் ,உயிரை எடுத்தார்” -குடியிருந்தவரோடு குஜாலாக இருந்த பெண் படுகொலை .. 

பெங்களூருவில் ஒருபங்களாவின்  உரிமையாளரான சிவராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.அவரும் அவரது மனைவி லட்சுமியும் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஹுலியுர்டுர்காவிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.

பெங்களூருவில் 35 வயதான தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது 36 வயதான வீட்டு உரிமையாளர் பெண்ணை  கொலை செய்துவிட்டு,பக்கவாதத்தால் முடங்கிப்போன கணவர் மற்றும் மகளை அதே  வீட்டில் கொலை செய்ய முயன்று,பிறகு  அதே வீட்டில் அவரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கி  தற்கொலை செய்து கொண்டார். 

murder

பெங்களூருவில் ஒருபங்களாவின்  உரிமையாளரான சிவராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.அவரும் அவரது மனைவி லட்சுமியும் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஹுலியுர்டுர்காவிலிருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரங்கதாமையா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாடியில் அவர்களின்  வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.அவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.அதனால்  அவர் தனது இரண்டு குழந்தைகளையும் தனது சொந்த ஊருக்கு  அனுப்பிவிட்டார்.
ரங்கதாமையாவுக்கு லட்சுமியுடன் கள்ள உறவு இருந்தது.ஆனால் சமீபத்தில் அவரின் மகள் சைத்ரா மற்றும் கணவர் சிவராஜ்,ஆகியோர் லக்ஷ்மியை ரங்கதமாயாவிடம் இருந்து விலகி இருக்கும்படி கூறியதால் இது அவரை கோபப்படுத்தியதால்,அவரது முழு குடும்பத்தையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார் .
அதனால் செவ்வாயன்று  ரங்கதாமையா,லக்ஷ்மியின் வீட்டிற்குள் அதிகாலை 12 மணியளவில் நுழைந்து,லஷ்மியை கொன்றுவிட்டு,அவரின் கணவர் மற்றும் மகளையும் தாக்கியுள்ளார்.பிறகு அவர் மூவரையும் கொன்றதாக நினைத்து,அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

murder.jpg3

மறுநாள் காலை 10.45 மணியளவில்,அக்கம்பக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், லட்சுமி சிவராஜின் வீட்டிற்குச் சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.வீட்டில்  லட்சுமியின் உடலையும்,அவரது மகள் சைத்ரா ஒரு கட்டிலில் மயக்கமடைந்து கிடப்பதையும், கணவர் சிவராஜ் இரத்தக் வெள்ளத்தில்  உதவியற்ற நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவள் அதிர்ச்சியடைந்தாள்.அக்கம்பக்கத்தினர் ராஜகோபாலநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் 
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவராஜ் மற்றும் சைத்ராவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிவராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருக்கிறார், அதே நேரத்தில் அவரது மகள் மயக்கத்தில் உள்ளார். “இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு  பதிவு செய்ய அவரது மகள் சுயநினைவு பெற நாங்கள் காத்திருக்கிறோம்.அவரது தந்தை பேசும் நிலையில் இல்லை, ”என்றார்கள் போலீசார்.