முடக்கப்பட்ட சென்னை அண்ணாசாலையில் மீண்டும் வாகனங்கள் இயங்க அனுமதி!

 

முடக்கப்பட்ட சென்னை அண்ணாசாலையில் மீண்டும் வாகனங்கள் இயங்க அனுமதி!

அண்ணாசாலை உள்ளிட்ட முக்கியமான போக்குவரத்து பகுதிகளும் மூடப்பட்டன. 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,373 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3000 ஐ எட்டியுள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். அதனால் சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதிப்படைந்த பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. அதே போல அண்ணாசாலை உள்ளிட்ட முக்கியமான போக்குவரத்து பகுதிகளும் மூடப்பட்டன.

ttn

 

நாடு முழுவதும் மே மாதம் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டிருப்பினும் சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உணவகங்கள், வங்கிகள், கட்டுமானம் மற்றும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முடக்கப்பட்ட அண்ணாசாலையில் மீண்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

கடந்த 23 ஆம் தேதி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையையின் ஒரு பகுதியாக சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை சுமார் 15கி.மீ அளவிற்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தற்போது சென்னையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அண்ணாசாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. அங்கு அனைத்து சிக்னல்களும் தற்போது இயங்கும் நிலையில், ஏராளமான வாகனங்கள் ஓட துவங்கியுள்ளன.