முக்கோண வடிவில் புதிய பாராளுமன்றம்.. மோடிக்கு தனி வீடு.. மொத்த விவரத்தையும் வெளியிட்ட மத்திய அரசு!

 

முக்கோண வடிவில் புதிய பாராளுமன்றம்.. மோடிக்கு தனி வீடு.. மொத்த விவரத்தையும் வெளியிட்ட மத்திய அரசு!

அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் ஒரே கட்டிடமாகக் கட்ட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1,000 கோடி வாடகை செலவாகிறது. அதனால், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் வகையில் ஒரே கட்டிடமாகக் கட்ட வேண்டும் என்றும் பாராளுமன்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், தற்போது மத்திய அரசின் அலுவலகங்கள் இயங்கி வரும் சாஸ்திரி பவன், நிர்மாண் பவன், கிரிஷி பவன், விஞ்ஞான் பவன் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட உள்ளன. 

ttn

முக்கோண வடிவ கட்டிடம் :
புதியதாகக் கட்டப்பட உள்ள பாராளுமன்றம், தற்போது இருக்கும் பாராளுமன்றத்தின் அருகில் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. அதே போல, ஜனாதிபதி மாளிகையிலிருந்து  இந்தியா கேட் வரை உள்ள ராஜபாதை முற்றிலும் நவீனமயம் ஆக்கப்பட உள்ளது. அந்த ராஜபாதை மொத்தமாக 3 கிலோ மீட்டர் நீளம் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல், ஜனாதிபதி வீட்டின் அருகே பிரதமர் நரேந்திர மோடிக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிற்கும் வீடு கட்டப்பட உள்ளது. இந்த மொத்த கட்டிடங்களுக்கான காண்டிராக்ட் எச்.சி.பி. டிசைன்ஸ் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 

ttn

ஒட்டு மொத்த செலவு:
இந்த கட்டிடங்களைக் கட்டுவதற்காக மொத்தமாக அந்த நிறுவனத்திற்கு மொத்தமாக ரூ.229,75,00,000 ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த எச்.சி.பி. டிசைன்ஸ் நிறுவனம் அடுத்த மாதத்திற்குள் டெண்டர் விடுகிறது. இந்த கட்டிடத்திற்கான ஒட்டுமொத்த செலவு ரூ.12 ஆயிரத்து  879 கோடி. 

ttn

கட்டிட பணிகள் முடியும் ஆண்டு:
முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய பாராளுமன்றம்  1,200 பேர் அமரும் வசதியுடன் கட்டப்பட்டு, கட்டிடப்பணி  2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்ட முடிக்கப்படும். அதாவது, இந்தியா தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்னர் கட்டிட பணிகள் முடியும். மத்திய அரசின் அலுவலகங்களுக்கான பொதுவான செயலகம் , 2024 ஆம் ஆண்டு தயாராகும். ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து இந்தியா கேட் வரை உள்ள ராஜபாதை 2022-ம் ஆண்டுக்குள் தயாராகும். 

ttn

பணிகள் தொடக்கம்:
புதியதாக அமைக்கப்பட உள்ள கட்டிடங்களில் ஊழியர்களுக்கான தேவைகளை மத்திய அரசு ஆரம்பித்து விட்டது. அதற்காக, ஒவ்வொரு அமைச்சகங்களிலும் இருக்கும் ஊழியர்களின் விவரங்களைக் கொடுக்குமாறு மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து செயலாளர்களுக்கும் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.