முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

 

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை குறித்துத் தரக்குறைவாக பேசினார். இதையடுத்து, அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கருணாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீத விசாரணை நடத்திய சென்னை எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், உயிரே போனாலும் கூவத்தூர் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என்றார். அதேசமயம், கருணாஸ் மீதான பழைய வழக்குகளும் தூசி தட்டப்பட்டு, அவர் மீது மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன், அவரை தகுதி நீக்கம் செய்யவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.