முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி! வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள், கலக்கத்தில் பா.ஜ.க.

 

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி! வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள், கலக்கத்தில் பா.ஜ.க.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 0.50 சதவீதம் குறைந்துள்ளது. 2015 மார்ச் மாதத்துக்கு பிறகு தற்போதுதான் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி குறியீட்டை மதிப்பிடுவதில் இந்த எட்டு துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதமாக உள்ளது. அதனால் 8 துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஒரளவு யூகிக்க முடியும்.

முக்கிய 8 துறைகள்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரிவு கண்டுள்ளது. அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 0.50 சதவீதம் குறைந்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்து இருப்பது அடிப்படை கட்டமைப்பு செலவினங்களில் தேக்கநிலை ஏற்பட்டு இருப்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் முதலீடுகளை முடுக்கி விட மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் கட்டுப்படுத்தபட்டுள்ளதே இதற்கு அர்த்தம் என பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய 8 துறைகள்

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி  சரிவு கண்டு இருப்பதால் பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை எழுந்துள்ளது. அதேசமயம் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.