‘முக்காலா முக்காபுலா’ செண்டைமேளத்தில் வீடியோ வெளியிட்ட ஸ்வேதா மேனன்!

‘முக்காலா முக்காபுலா’ செண்டைமேளத்தில் வீடியோ வெளியிட்ட ஸ்வேதா மேனன்!

இசைக்கு மொழி கிடையாது என்பது எல்லாம் பழசு. இசைக்கு வயசும் கிடையாது என்பது தான் இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் என்று தங்களது ரசனைகளை வாட்ஸ் அப் செய்திகளில் லிஸ்ட் போட்டு அலட்டம் பெருமை வாசிக்கும் அந்த தலைமுறையினர் லிஸ்ட்டில் கண்டிப்பாக காதலன் படத்தையும் சேர்த்து வருவார்கள்.

prabhudeva and naguma

‘ஊர்வசி… ஊர்வசி’, ‘முக்காலா முக்காபுலா’ போன்ற பாடல்கள் அந்த வருடத்தின் ஹிட் லிஸ்ட்டில் இருந்தது. ஷங்கரின் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான ‘காதலன்’ படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு என்று நடித்த பலரும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டனர். பின்னணி பாடகரான எஸ்பிபியும் தேர்ந்த நடிகராக அடையாளம் காணப்பட்ட படமாக காதலன் அமைந்தது. இன்றளவிலும், தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்  ப்ளே லிஸ்ட்டில் இந்த படத்தில் பாடல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவின் பாரம்பரிய இசையான செண்டைமேளத்தில் முக்காலா முக்காபுலா பாடலை இசைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். 

கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலை செண்டைமேளத்தில் இசையமைத்துள்ளனர். இந்த வீடியோவை பிரபல பின்னணி பாடகி ஸ்வேதா மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 90ஸ் கிட்ஸ் மகிழ்ச்சியுடன் இந்த புது வெர்ஷனையும் ஷேர் செய்து வருகிறார்கள்.