முகேஷ் அம்பானி நிறுவனத்தை ஓவர்டேக் செய்த டி.சி.எஸ்.

 

முகேஷ் அம்பானி நிறுவனத்தை ஓவர்டேக் செய்த டி.சி.எஸ்.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) முதலிடத்தை கைப்பற்றியது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சென்ற வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் பல முன்னணி நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு குறைந்தது. குறிப்பாக டாப் 10 நிறுவனங்களில் எச்.டி.எப்.சி. வங்கி, எச்.டி.எப்.சி. நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டேட் வங்கி 4 நிறுவன பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ.84,433 கோடி குறைந்தது. அதேசமயம், இந்துஸ்தான் யூனிலீவர், டி.சி.எஸ்., இன்போசிஸ், ஐ.டி.சி., கோடக் மகிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய 5 நிறுவன பங்குகளின் ஒட்டு மொத்த சந்தை மதிப்பு ரூ. 22,058 கோடி உயர்ந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டாப் 10 நிறுவனங்கள்                      சந்தை மதிப்பு 
1. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்            ரூ.7.91 லட்சம் கோடி
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்             ரூ.7.69 லட்சம் கோடி
3. எச்.டி.எப்.சி. வங்கி                                  ரூ.6.22 லட்சம் கோடி
4. இந்துஸ்தான் யூனிலீவர்                      ரூ.3.74 லட்சம் கோடி
5. எச்.டி.எப்.சி. நிறுவனம்                          ரூ.3.74 லட்சம் கோடி
6. இன்போசிஸ்                                          ரூ.3.38 லட்சம் கோடி

கோடக் மகிந்திரா வங்கி
7. ஐ.டி.சி.                                                      ரூ.3.31 லட்சம் கோடி
8. ஸ்டேட் வங்கி                                        ரூ.3.05 லட்சம் கோடி
9. கோடக் மகிந்திரா வங்கி                      ரூ.2.88 லட்சம் கோடி
10. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி                               ரூ.2.68 லட்சம் கோடி